September 29, 2022

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் குண்டு வீச்சு

உக்ரைன்: குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதுல்… உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், Mariupol உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையில் உக்ரைனுக்கு உதவ போலந்து போர் விமானங்களை வழங்கியதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து அந்நாட்டுக்கு உதவி செய்ய ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு அனைத்து MiG-29 போர் விமானங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக போலந்து கூறியிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர், போலந்தின் இந்த முடிவு மிகவும் விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!