August 16, 2022

கடந்த 7 ஆண்டுகள் இல்லாத அளவில் ரஷியாவின் ரூபிள் மதிப்பு வீழ்ச்சி

மாஸ்கோ : உக்ரைன் மீது 4 மாதங்களாக ரஷியா போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன. இதனால், ரஷியாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷியாவின் அந்நிய செலவாணி மதிப்பானது 52.9 ஆக உள்ளது. இதுகுறித்து ரஷிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகள் இல்லாத அளவில் ரஷியாவின் ரூபிள் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த போக்கு நீடித்தால் நாட்டில் வணிகங்கள் பாதிக்கப்படலாம்.

ஏற்றுமதி சார்ந்த பல தொழில்களின் லாபம் தற்போது எதிர்மறையாக மாறியுள்ளது. இதனை உறுதிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். இன்னும் பல மாதங்களுக்கு இதுபோன்ற நிலை நீடித்தால், முதலீட்டு செயல்முறைகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், தற்போதைய உற்பத்தித் திட்டங்களை சரிசெய்து உற்பத்தி அளவைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பல நிறுவனங்கள் வரக்கூடும் என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!