நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் – சவுதி அரேபியா

டெல்லி : முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரையம் நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
முகம்மது நபியைப் பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்துக்களை சவுதி அரேபியா கண்டித்துள்ளது மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை வரவேற்றுள்ளது. சவூதி அரேபியாவின் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல்-சவுத் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம், நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு மரியாதை அளிக்கும் நாட்டின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்தை இன்சுலேடிங் என்று சவுதி அரேபியா விவரித்தது. மேலும், நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.