December 2, 2022

உலக அளவில் முதல்நாளிலேயே செம வசூலாம் திருச்சிற்றம்பலத்திற்கு!!!

சென்னை: செம வசூலாம்… தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளி வந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சகர்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் ரசிகர்களும் தியேட்டர்களில் திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

முதல் நாளில் உலக அளவில் 9 கோடி ரூபாய்க்கும் அதிகமாக திருச்சிற்றம்பலம் வசூலித்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே 7.4 கோடி ருபாய் வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!