August 20, 2022

தஞ்சை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த எள் செடிகள் அறுவடை செய்யப்பட்டு காயவைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் நெல் சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. மேலும் கோடை சாகுபடி நடப்பதும். வழக்கம். இதேபோல் உளுந்து, பயறு, எள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த எள் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கியது.

அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை விவசாயிகள் சாலையில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் முக்கியமானது. இதனால் செடிகள் எளிதாக காய்ந்து விடும். எள் சேகரிக்கும் பணியும் சீக்கிரம் முடிந்து விடும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

முன்பு அதிகளவில் எள் பயிரிட்ட விவசாயிகள் தற்போது அதன் பரப்பளவை குறைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மானாவாரி நிலங்களில் மட்டுமே தற்போது எள் சாகுபடி செய்யப்படுகிறது.மேலும் மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகள் தற்போது ஈடுபட தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை, முன்னையம்பட்டி பகுதிகளில் மட்டும் கம்பு , சோளம் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!