September 27, 2022

பாஜக இல்லாமல் வாழ முடியும் என அவர் காட்டி விட்டார் – சிவசேனா

மும்பை : பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இருப்பினும், நிதிஷ்குமாருக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் காரணமாக சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ்குமார் ஆட்சி அமைத்து உள்ளார்.

இதுகுறித்து சிவசேனா சாம்னா வெளியிட்டதில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.சி.பி. சிங்கிற்கு பின்னால் இருந்து ஜனதா தளம் கட்சியை உடைக்க பாஜக முயற்சி செய்தது. இதை உணர்ந்து கொண்ட நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி புயலை உருவாக்கி உள்ளார். இது சூறாவளியாக மாறினால், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவலாக அமையும்.

இந்த புதிய கூட்டணியில் நிதிஷ்குமார், லாலுபிரசாத் இடையேயான பகை முடிவுக்கு வரும். சிவசேனாவுக்கு எதிராக கலகம் செய்த ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்கு முன்னால் மண்டியிட்டார். ஆனால் பாஜக இல்லாமல் வாழ முடியும் என நிதிஷ்குமார் அவருக்கு காட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!