November 29, 2022

அதிர்ச்சி தகவல் : குழந்தைகளுக்கு பல் பிரச்சனைகள் உண்டாக்கும் ஆப்பிள்…

ஆப்பிள் பழத்தின் நன்மைகள்…

ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின்  என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாத்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண்புரை வராமல் தடுக்கும். ஆப்பிளை சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும், மூளை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறையும்.

ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் ஆகும். வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பொருட்களில் ஒன்று.

இதில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டுள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆப்பிள் பழத்தின் தீமைகள்…

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், அது உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை உண்டாக்கும். அதாவது கலோரி அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத்திற்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

ஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்சனிக் அதிகம் உள்ளது.

ஆப்பிள் ஜூஸில் அதிக கலோரி மற்றும் சர்க்கரை இருப்பதால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை கூடும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது பல இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஆப்பிள் பழச்சாற்றில் செயற்கை இனிப்புகளை சேர்க்கும் போது, அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

பொதுவாக, ஆப்பிள்களில் புரதம், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் நீங்கள் ஆப்பிள் சாறு குடித்தால், அதில் சுத்தமான நார்ச்சத்து இல்லை.

ஆப்பிள் ஜூஸில் சர்க்கரை அதிகம் உள்ளதால், அதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதால், குழந்தைகளுக்கு பல் பிரச்சனைகள் ஏற்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!