October 5, 2022

கோத்தபய ராஜபக்சேவுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கவில்லை – சிங்கப்பூர் மந்திரி

சிங்கப்பூர் : இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, கடந்த மாதம் 13-ந் தேதி மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து, தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி. ஜெரால்டு ஜியாம் கேட்ட கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் அளித்த பதிலில், பொதுவாக, பிற நாட்டு அரசுகளின் முன்னாள் தலைவர்களுக்கு சிங்கப்பூர் அரசு எவ்வித தனிச்சலுகைகளோ, சட்ட பாதுகாப்போ, விருந்தோம்பலோ அளிப்பது இல்லை. கோத்தபய ராஜபக்சேவுக்கும் தனிச்சலுகைகளோ, சட்ட பாதுகாப்போ அளிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், வெளிநாட்டினர் உரிய பயண ஆவணங்களுடன் வந்தால், சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயத்தில், தேசநலன் கருதி வெளிநாட்டினரை அனுமதிக்க மறுப்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது. ஒரு வெளிநாட்டுக்காரர், அவரது நாட்டில் தேடப்படுபவராக இருந்தால், அவரது அரசு வேண்டுகோள் விடுத்தால், அவரை பிடிக்க சட்டத்துக்கு உட்பட்டு சிங்கப்பூர் அரசு உதவும். ஒரு வெளிநாட்டுக்காரரின் அச்சுறுத்தலை ஆய்வு செய்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!