December 8, 2022

வரும் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி… விசிக தலைவர் தகவல்

சென்னை: விசிக தலைவர் அறிவிப்பு… வரும் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடக்க உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு காரணங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் இன்று மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் வரும் 11-ம்தேதி மனித சங்கிலி பேரணி நடைபெறும் என விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சி மற்றும் மக்கள் இயக்கங்களுடன் பேசி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் வருகிற 11 ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதுமான இந்த மனிதச் சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!