October 5, 2022

அடிப்படை வசதிகளை யாரும் பறிக்கக் கூடாது என்பதே சமூக நீதி – பிரதமர் மோடி

டெல்லி : மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சௌரிய சக்ரா விருது பெற்றவருமான ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றியபோது, சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக பழங்குடியின சமுதாயத்தைச்சேர்ந்த ஒரு பெண், இன்று நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய நாள் இது. சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் சம வாய்ப்புகளைப் பெற வேண்டும், அடிப்படை வசதிகளை யாரும் பறிக்கக் கூடாது என்பதே சமூக நீதி. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் போது, இதைப் புரிந்துகொண்டு இந்த திசையில் செல்வது மிகவும் முக்கியம்.

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அரசு செயல்படுத்தும் வளர்ச்சிப் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் நாட்டையும் சமூகத்தையும் தங்களது அரசியலுக்கு மேலாக கருத வேண்டும். ஒரு கட்சியையே அல்லது ஒரு தனிநபரையோ எதிர்ப்பது , நாட்டின் எதிர்ப்பாக மாறக்கூடாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!