July 2, 2022

எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை : தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லூர்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-நெல்லூர், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை,சூலூர்பேட்டை-சென்டிரல், ஆவடி-சென்டிரல் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி-சென்டிரல், எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருப்பதி இடையே மதியம் 2.15 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 24, 25, 31-ந்தேதி, ஜூன் மாதம் 1,7,8-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. விஜயவாடா-சென்டிரல் இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக சென்டிரல்-விஜயவாடா இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-மதுரை இடையே மதியம் 1.50 மணிக்கு புறப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!