September 29, 2022

உலக சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பிரக்ஞானந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் என்று கூறியுள்ளார்.

மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடியபோது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் 2-வது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!