August 18, 2022

தி.மு.க. ஆட்சிக்காலம் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை : ஜமால் முகமது கல்லூரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாட்டுப்பற்றுமிக்க தலைசிறந்த தமிழர்கள் இருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரிதான் இந்த ஜமால் முகமது கல்லூரி. இரண்டு நல்லவர்கள் சேர்ந்தால், எத்தனை பேருக்கு அறிவொளி கொடுக்க முடியும் என்பதன் அடையாளமாக இந்த கல்லூரி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கல்வி, படிப்பு, பட்டம் ஆகியவற்றை தாண்டிய தனித்திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் இருக்கக்கூடிய இளைஞர்களால்தான் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும், அதிக வளர்ச்சியை அடைய முடியும். அந்த நோக்கத்துக்காகத்தான் நான் முதல்வன் என்ற திட்டத்தை நம்முடைய தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. இது என்னுடைய கனவு திட்டம். அதனால்தான் என்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று அந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

பள்ளிக்கல்வியில் பெருந்தலைவர் காமராஜர் காலமும், கல்லூரிக்கல்வியில் நம்முடைய கருணாநிதி காலமும், சிறப்பாக விளங்கியதை போல, இந்த ஆட்சிக்காலம் உயர்கல்வியின், ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக திகழ வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!