கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு

பிரான்ஸ்: பரபரப்பை கிளப்பிய பெண்…பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரைன் கொடியின் வண்ணம் தீட்டி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசிய அந்தப் பெண் உக்ரைன் வண்ணங்களுடன் அரை நிர்வாணமாக நின்றார்.
அவர் உடலில் கைகள் படருவது போல் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.