April 20, 2024

பங்கு சந்தை | சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சாதகமான நிலையில் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 278 புள்ளிகள் உயர்ந்து 61,839 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 81 புள்ளிகள் உயர்ந்து 18,263 புள்ளிகளாக இருந்தது.

பங்குச் சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 216.91 புள்ளிகள் உயர்ந்து 61,777.55 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 64.35 புள்ளிகள் உயர்ந்து 18,246.10 ஆக இருந்தது.

அமெரிக்க கடன் உச்சவரம்பு நெருக்கடி விரைவில் இயல்பாக்கப்படலாம் என்ற நம்பிக்கையின் அறிகுறிகளுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகள் நேர்மறையான போக்கிற்குத் திரும்பின. இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் இரண்டு நாள் சரிவில் இருந்து மீண்டு இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளின் அடிப்படையில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, கோடக் மேகந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் , NTPC , TCS, IndusInt Bank, State Bank of India, HCL Technologies, Maruti Suzuki ஆகியவை லாபம் அடைந்தன. M&M, Tata Motors, Titan Company, Hindustan Unilever, Power Grid Corporation, L&T, Tech Mahindra மற்றும் TCS பங்குகள் சரிவைச் சந்தித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!