April 24, 2024

பங்கு சந்தை | சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று (திங்கட்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிந்து 61,606 புள்ளிகளாக இருந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 18,180 புள்ளிகளில் நிறைவடைந்தது.

பங்குச் சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், வர்த்தக நேரத்தின் போது, ஆரம்ப சரிவு சரி செய்யப்பட்டு ஏற்றத்துடன் காணப்பட்டது. காலை 09:49 நிலவரப்படி, சென்செக்ஸ் 249.86 புள்ளிகள் உயர்ந்து 61,979.54 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 53.80 புள்ளிகள் உயர்ந்து 18,257.20 ஆக இருந்தது.

கலப்பு போக்குகள் காரணமாக வாரத்தின் முதல் நாள் உலகச் சந்தைகள் சரிவில் தொடங்கினாலும், வர்த்தக நேரத்தின் போது இந்திய பங்குச்சந்தைகள் ஆரம்ப சரிவில் இருந்து மீண்டன.

தனிப்பட்ட பங்குகளின் அடிப்படையில் என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், சன்பார்மா இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி, டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எம்&எம், டாடா ஸ்டீல், மாருதி ஸ்டேட் சுஸுகி. இந்தியாவின் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை லாபம் அடைந்தன. இண்டஸ்இன்ட் வங்கி, நெஸ்லே இந்தியா, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை நஷ்டமடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!