December 8, 2022

பிரபல விஜய் பட நடிகைக்கு அறுவை சிகிச்சையா?….திடுக்கிடும் தகவல்…

சென்னை : ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’ படத்திலும் நடித்தார்.

ஆனால், தமிழில் அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இந்தியில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

சமீபத்தில் விமான நிலையம் வந்த மாளவிகா மோகனனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். அவர் முகம் அசாதாரணமாகத் தெரிந்தது. ஒருவேளை அவருக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்திருக்கலாமோ? ரசிகர்கள் பலவிதமாக யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

அவர்முகத்தில் என்ன குறை? என்பது அனைவரின் கேள்வி. ஆனால் இதற்கு என்ன காரணம்? அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!