November 28, 2022

தோனியின் சாதனையை முறியடித்த சூர்ய குமார் யாதவ்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….

கவுகாத்தி :  இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்தய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 237 ரன்கள் எடுத்தது.

மெகா இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி போராடி தோற்றது. அந்த அணியால்20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் விராட் கோலி புதிய சாதனை படைத்தனர். தோனியும் கே.எல்.ராகுலும் 2006ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 13.10 என்ற விகிதத்தில் 100 ரன்கள் எடுத்தனர். அதற்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல்-ரோஹித் சர்மா 13.02 என்ற ரன் ரேட்டில் 100 ரன்களை எடுத்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி – சூர்ய குமார் ஜோடி 14.57 என்ற ரன் ரேட்டில் 100 ரன்களை கடந்துள்ளது. சூர்ய குமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலி 28 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 49 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!