September 29, 2022

ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். இது ரஜினிகாந்த்க்கு 169-வது படமாகும். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்,ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அல்லது 22 -ஆம் தேதிகளில் தொடங்கப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். தற்போது, இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!