October 5, 2022

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இராஜினாமா

இலங்கை: இலங்கையில் செயல்பட்டு வரும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் முதன்மை எரிவாயு வழங்குனரான Litro Gas Lanka, எரிவாயு சிலிண்டர்களின் பற்றாக்குறை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு மற்றும் உற்பத்திப் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

தெஷார ஜயசிங்கவின் தலைமையின் கீழ் இயங்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் போராட்டம் தினம் தினம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் உற்பத்தியை தொடங்குவதாக லிட்ரோ நிறுவனம் கூறியிருந்த நிலையில் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!