திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்

திருச்சி: திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்… திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வருவாய் துறை அலுவலகத்தில் அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றார். அங்கு புயல் பாதிப்பு குறித்த ஏற்பாடுகளை கேட்டறிந்தார். மக்கள் பாதுகாப்புக்கான தயார் நிலை குறித்தும் கேட்டறிந்தார். இதுபோல் திடீர் திடீரென ஆய்வு மேற்கொள்வதால் எங்கும் தவறு நேராது என்பது ஸ்டாலினின் கணக்கு.
அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்தை அடுத்து அரசு பேருந்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பெண்களிடம் இலவச பயணம் குறித்து கேட்டறிந்தார். அது போல் காவல் நிலையங்களுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், காவலர் குடியிருப்புகளில் அவர்களது குடும்பத்தினரிடமும் நலம் விசாரிப்பதை தவறுவதில்லை.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு ஆய்வு நடத்த புறப்பட்டார்.
அதன்படி காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் முன்னறிவிப்பு ஏதுமின்றி திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் திடீர் ஆய்வு நடத்தியதால் அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.