September 27, 2022

மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்து வரும் சென்னை மாநகரம்

சென்னை : 75-வது சுதந்திர தின விழா வருகிற 15- ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னையின் பல இடங்களில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பழமை வாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்திலும் வண்ண வண்ண மின்விளக்குகள் மற்றும் பலூன் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலைய பாரம்பரிய கட்டிடங்களில் மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமைச்செயலகம் அமைந்து உள்ள சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பாரம்பரிய ரிப்பன் மாளிகை கட்டிடம், பாரிமுனையில் உள்ள பழங்கால கட்டிடங்கள், தனியார் நிறுவன கட்டிடங்கள், ஓட்டல்கள் அனைத்திலும் வண்ண மின்விளக்கு அலங்கார வசதிகள் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கின்றன.

சென்னை மெட்ரோ ரெயில் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் பிரமாண்ட தேசிய கொடி பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரெயில் நிலைய உள்பகுதியில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!