October 5, 2022

விலைவாசி உயர்வுக்கு இடையிலும் செம லாபம் பார்த்த நிறுவனம்

புதுடில்லி: செம லாபம்… நாட்டின் மிகப்பெரிய எப்.எம்.சி.ஜி., நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் விலைவாசி உயர்வால் உற்பத்தில் செலவு கூடிய போதும் 2022 முதல் காலாண்டில் ரூ.2,289 கோடி லாபம் பார்த்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டு லாபமான ரூ.2,061 கோடியுடன் ஒப்பிடும் போது 11% அதிகமாகும்.

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஒரு லார்ஜ் கேப் நிறுவனம். இதன் சந்தை மதிப்பு ரூ.5.4 லட்சம் கோடி. பெர்சனல் கேர் உட்பட பல்வேறு தயாரிப்புகளை ஹிந்துஸ்தான் யுனிலீவர் விற்கிறது. இந்நிலையில் தான் முதல் காலாண்டில் ரூ.2,289 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன் லாப விகிதம் 23.2% என்ற அளவில் சிறப்பாக உள்ளது. நடப்பு காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 19% உயர்ந்துள்ளது. EBITA எனும் வட்டி, வரி, தேய்மானம், கடன் அடைப்பதற்கான நிதி ஆகியவற்றுக்கு முந்தைய வருவாய் ரூ.3,247 கோடியாக உள்ளது. ஆண்டுக் ஆண்டு பார்க்கையில் இது 110 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.1% சரிந்துள்ளது.

நிறுவனத்தின் வருவாய், லாபம், செயல்பாடு பற்றி ஹிந்துஸ்தான் யுனிலீவர் சி.இ.ஓ., மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மேத்தா கூறியதாவது: சவாலான சூழல், இதுவரையில்லாத அளவிற்கு பணவீக்கம், அதன் விளைவால் நுகர்வு மீதான தாக்கம் போன்றவை இருந்த போதும் நிறுவனத்தின் விற்பனை, லாபம் ஆகியவற்றில் இந்த காலாண்டிலும் சிறந்த ஒரு முடிவினை வழங்கியிருக்கிறோம். எங்கள் பிசினஸ் மாடலை பாதுகாக்கும் அதே வேளையில் லாப விகிதத்தை சிறப்பாக பராமரித்து பிறருடன் போட்டிப்போட்டு வளர்ந்துள்ளோம்.

பணவீக்கம் தொடர்பாக தற்காலிக கவலைகள் உள்ளன. இருப்பினும் பொருட்கள் விலைகள் சற்று தணிந்துள்ளன. வழக்கமான பருவமழை இருக்கும் என வானிலை கணிப்புகள் கூறுகின்றன. மேலும் அரசு எடுத்து வரும் நிதி நடவடிக்கைகள் தொழில்துறைக்கு நன்மை பயக்கும். இந்திய எப்.எம்.சி.ஜி., துறையின் நடுத்தர முதல் நீண்ட கால வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், நிலையான, லாபகரமான, பொறுப்பான வளர்ச்சியை வழங்குவதில் எங்கள் கவனம் இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!