December 9, 2022

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது

சென்னை: நாளை வெளியாகிறது… சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது.

இது குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிருவனமான யு வி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சூர்யா -சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்றதோடு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படம் 2 பாகங்களாகவும் 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆக.24ல் துவங்கியது.

இப்படத்தில் கதாபாத்திரங்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட நிலையில் நாளை 9ம் தேதி காலை 10 மணி அளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!