ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வார்னே சாதனையை சமன் செய்த லயன்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. லாதன் லயனின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 212 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் லாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வார்னே சாதனையை லயன் சமன் செய்துள்ளார். ஆசியா கண்டத்தில் நாதன் லயன் 9 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக மூன்று முறையும், வங்காள தேசம் அணிக்கு எதிராக 3 முறையும் இலங்கை அணிக்கு எதிராக 2 முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆசியாவில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மறைந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார். அனைத்து டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து லாதன் லயன் 20 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ஆலன் டொனால்ட் மற்றும் டேனியல் விக்டோரி சாதனையை சமன் செய்துள்ளார்.