August 18, 2022

ருசியோ… ருசி என்று சொல்லும் அளவிற்கு வெண்டைக்காய் பச்சடி செய்முறை

சென்னை: வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிட வெண்டைக்காய் பச்சடி செய்து கொடுங்கள்.

தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் – 5 மேஜைக்கரண்டி
தக்காளி -1
பச்சை மிளகாய் – 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)
சீரகம் – 2 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 3

தாளிக்க:

கடுகு – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 3
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை – சிறிது

செய்முறை: வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறிக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும் வரை வதக்கவும்.

பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 1கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும். வெண்டைக்காய் பச்சடி ரெடி.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!