September 29, 2022

மக்களை தேடி மருத்துவ திட்டம் குறித்து அமைச்சர் பெருமிதம்

சென்னை: அமைச்சர் தகவல்… மக்களை தேடி மருத்துவம் திட்டம் முழுமையாக வெற்றி பெற்றால் தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகள் இல்லாமல் போகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் உதவி செய்து பலரது உயிரை காப்பாற்றிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில், அலர்ட் தன்னார்வ அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பேசிய மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 56 லட்சத்து 26 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

அந்த திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு மருத்துவம் கொடுக்க இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!