May 21, 2022

தடுப்பூசிகளை வீணாக்காமல் கூடுதலாக 11 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் பெருமிதம்

சென்னை : மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்கள் நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சி காலத்தில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 தடுப்பூசிகள், அதாவது 6 சதவீத தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது. ஆனால் தற்போது வீணாக்கப்பட்டதை விடவும் 11 லட்சத்து 14 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 3 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரத்து 487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!