December 10, 2022

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 கோடியை தாண்டியது

வாஷிங்டன் : சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து கொண்டே வருவதால் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 74 லட்சத்து 53 ஆயிரத்து 852ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 59 கோடியே 72 லட்சத்து 16 ஆயிரத்து 701 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 31 ஆயிரத்து 595 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!