October 5, 2022

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

இஸ்லாமாபாத் : உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக 400 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜாவேத் அக்ரம் கூறுகையில், கொரோனா வைரஸ் ஒரு ரோலர் கோஸ்டர் போல் செயல்படுகிறது. இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், தடுப்பூசிகள் இப்போது செயல்திறனை இழந்து விட்டது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!