September 27, 2022

பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 5 மில்லியனில் இருந்து 7 மில்லியனாக உயரும் – ஐ.நா.

ஜெனீவா : சோமாலியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த வறட்சி நிலை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து, சுமார் 10 லட்சம் மக்கள் சோமாலியாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் சுமார் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் தண்ணீரைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பான யுன்எச்சிஆர் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அங்கு பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 5 மில்லியனில் இருந்து 7 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!