போர்த்துக்கல் பிரதமரின் திடீர் விஜயம்… உக்ரைனின் கீவ் நகரை பார்வையிட்டார்

உக்ரைன்: திடீர் விஜயம்… போர்த்துக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா (António Costa) இன்று காலை உக்ரைனின் கிய்வ் நகருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது காட்டுமிராண்டித்தனமான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாக அவர் (António Costa) தெரிவித்தார். மேலும், உக்ரைன் நாட்டிற்கும் இந்த மக்களுக்கும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உணர்ச்சியுடனும் மரியாதையுடனும் தான் அங்கு வந்துள்ள்லதாகவும் அவர் (António Costa) குறிப்பிட்டார்.
அதேவேளை கடந்த 2015 முதல் கோஸ்டா (António Costa) போர்த்துக்கல் பிரதமராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.