August 18, 2022

சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் வருகையால் நகரின் பெருமை அதிகரிக்கும்

மைசூரு: ‘பிரதமர் வருகையால் பெருமை அதிகரிக்கும்… ‘நடப்பாண்டு மைசூரில் கொண்டாடப்படும், சர்வதேச யோகா தினத்துக்கு பிரதமர் வருகை தருவது நகரின் பெருமையை அதிகரிக்கும்,” என மத்திய ஆயுஷ் அமைச்சக இயக்குனர் விக்ரம் சிங் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மத்திய ஆயுஷ் துறை இயக்குனர் விக்ரம் சிங் தலைமையில், மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலக ஹாலில், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் அவர் பேசியதாவது:

யோகாவுக்கு மைசூரு ஏராளமான பங்களிப்பை அளித்துள்ளது. யோகா வல்லுனர்கள் பலர், மைசூரில் பணியாற்றுகின்றனர். வெளிநாட்டு பிரஜைகள், மைசூருக்கு வந்து யோகா கற்கின்றனர். தற்போது யோகா தினத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி மைசூருக்கு வருவது, நகரின் பெருமையை அதிகரிக்கும்.

மைசூரின் யோகா தின நிகழ்ச்சியை, இந்திய அரசும், ஆயுஷ் துறையும் ஏற்பாடு செய்கின்றன. மைசூரில் ஜூன் 20 மற்றும் 21ல், தசரா பொருட்காட்சி மையத்தின் வளாகத்தில், யோகா கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!