August 20, 2022

மூன்றாம் நாளாக தொடர்கிறது ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்

கடலூர்: 3ம் நாளாக தொடரும் போராட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 3ம் நாளாக வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு 30 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொது விநியோகத்திற்கான தனித் துறை அமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக இருந்தால் பல மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3நாள் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டன.

அதன்படி கடந்த 7ம் தேதி முதல் தொடங்கியதையொட்டி இன்று 3-வது நாளாக 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கடலூர் பழைய கலெக்டர் முன்பு திரண்டனர்.

பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் மூடப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!