October 5, 2022

பற்களில் உள்ள கறைகளை நீக்க எளிய முறை உங்களுக்காக!!!

சென்னை: பற்களில் உள்ள கறைகளை நீக்க எளிய முறை… நம் புற அழகைத் தீர்மானிக்கும் உறுப்புகளில் முக்கியமானது பல். பற்களில் கறை ஏற்பட்டால், அது முகப்பொலிவை பாதிக்கும்.

பற்களில் கறை படிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பல் துலக்காததாலும், சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும் ஏற்படும் மஞ்சள் கறையை எளிய வீட்டு மருத்துவம் மூலமாகவே நீக்கிவிடலாம். “பல் துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும்.

* நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினால், மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.

* காலையில் நல்லெண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிப்பது (Oil Pulling) நல்லது.

* உமிழ்நீர் அதிகமாகச் சுரப்பதாலும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

* சாப்பிட்டு முடித்ததும், `மவுத் வாஷ்’ பயன்படுத்துவதன் மூலம் கறையைத் தவிர்க்கலாம். தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது, மவுத் வாஷைவிடச் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!