April 19, 2024

பள்ளி பேருந்தில் இருந்து வந்த புகை… கர்ப்பிணி பெண் டிரைவர் துணிந்து குழந்தைகளை காப்பாற்றினார்

அமெரிக்கா: அமெரிக்காவில், 30க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

சம்பவத்தன்று இம்யூனெக் வில்லியம்ஸ் என்ற பெண் ஓட்டுநர் 37 குழந்தைகளுடன் பள்ளிப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, பேருந்துக்குள் புகை வந்ததால் சுதாரித்துக் கொண்ட அவர், பேருந்தை நிறுத்திவிட்டு அதிலிருந்த குழந்தைகளை கீழே இறங்கச் செய்தார்.

அடுத்த சில வினாடிகளில், பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நடக்கப் போவதை உணர்ந்து துணிச்சலுடன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பெண் ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!