November 28, 2022

அப்பாவை வைத்து இயக்க மாட்டேன்… மகன் திட்டவட்டம்…

சென்னை : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய்க்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய் லண்டனில் படித்து வருவதாகவும், படிப்பை முடித்துவிட்டு சஞ்சய் இயக்குனராக களம் இறங்கப் போவதாகவும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், சஞ்சயிடம், உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, சுலபமாக இயக்குனராகலாம் என்றார். அதாவது விஜய் இப்போது டாப் ஸ்டார். அதனால் அப்பாவை வைத்து படம் இயக்கினாலும் பெரிய இயக்குனராகலாம் என்றார்.

ஆனால் சஞ்சய் தான் முதலில் படத்தை இயக்க வேண்டும் என்றால் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்குவேன் என்று கூறியுள்ளார். அதற்குக் காரணம் அவர் அப்பாவை வைத்து இயக்கினால் படம் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் விஜய் வெற்றி பெற்றதால் பெயர் வரும் என்றார். எனவே முதலில் வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்கும் எண்ணம் சஞ்சய்க்கு இருப்பதாகவும், வெற்றி கண்ட பிறகு தனது தந்தையை வைத்து இயக்குவதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு தனது திறமை மீது நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் சமீபத்தில் குறும்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சஞ்சய்.இப்போது தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களை இயக்கி வரும் சஞ்சய் விரைவில் ஒரு பெரிய படத்தை இயக்கவுள்ளதாக கூறி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!