November 28, 2022

தமிழகத்தின் வாசல் கதவு வரை அந்த உளவு கப்பல் வரப்போகிறது !!

கொழும்பு : இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்தியா எல்லா அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்தது. ஆனால், இன்று இந்தியாவை பாதுகாப்பு விஷயத்தில் இலங்கை அரசு அலறவிட்டுள்ளது. பொதுவாகவே சிங்களத் தலைவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்பது கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் பல தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் இந்தியாவுக்கு துரோகம் செய்யும் ஒரு செயலை சிங்கள தலைவர்கள் நிகழ்த்தி காட்டி உள்ளனர்.

சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும், கப்பலின் வருகையை காலவரையின்றி ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது. ஆனால் சீனா அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.

இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருப்பதால் நாங்கள் வருவதை தடுக்க இயலாது என்று சீனா அதிகாரத்துடன் பதில் அளித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தியபோது, இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக யுவான் வாங்-5 உளவு கப்பல் நாளை மறுநாள் ஹம்பாத்தோட்டை துறைமுகத்துக்கு வந்துவிடும். 22-ந் தேதி வரை அது அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த 7 நாட்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சீனா இதையெல்லாம் நிச்சயம் மதிக்காது. நிச்சயமாக அது உளவு தகவல்களை சேகரிக்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்.

தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். ராணுவ ரீதியிலான பல ரகசிய நடவடிக்கைகளையும் இந்த உளவு கப்பல் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இலங்கை சிங்கள தலைவர்கள் அளவுக்கு மீறி கடன் வாங்கிவிட்டு வட்டி கொடுக்க முடியாமல் சீனாவிடம் அடிபணிய நேரிட்டதால் இந்த ஆபத்து நம்மை நெருங்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!