September 29, 2022

ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைகிறது… மக்கள் அவதி

சென்னை: தீவிரமடையும் போராட்டம்… தமிழ்நாட்டில் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்க கோரி வருகிற திங்கட்கிழமை முதல் (13-ந்தேதி) சென்னையிலும் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேசன்கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ரேசன் கடை ஊழியர்கள் நேற்று முதல் கடைகளை திறக்காமல் ‘ஸ்டிரைக்’ செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சிந்தாமணி, காமதேனு மற்றும் சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் ரேசன் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், கடலூர், தேனி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரேசன் கடை திறக்கப்படாததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!