August 17, 2022

பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முன்னாள் முதல்வர்

புதுவை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி கேரளாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் வழியில் புதுச்சேரிக்கு நேற்று அதிகாலை வந்தது. ராஜீவ்காந்தி நினைவு ஜோதி புதுச்சேரியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது. இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கத்திற்கு ஊர்வலமாக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றனர். இந்த ஊர்வலத்தில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கருப்பு துண்டு அணிந்தும், மெழுகு வத்தி ஏந்தியபடியும் கோஷமிட்டு சென்றனர்.

அதன்பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரசார் அங்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். இதனையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நாட்டினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகள் மேற்கொண்டவர். மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் உள்ளிட்ட மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றியவர்.

பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வேதனையை அளிக்கிறது. ராஜீவ் காந்தியோடு, காவல் துறையினர், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என 16 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது. பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!