October 5, 2022

உக்ரைன் நாட்டின் 1 லட்சம் அகதிகளுக்கு இடம் அளிக்க முன்வந்த அமெரிக்கா

வாஷிங்டன் : உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாத காலமாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இருந்து 35 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவேகியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 1 லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 1 லட்சம் உக்ரைன் அகதிகளை அமெரிக்கா வரவேற்கும் என்று தெரிவித்தார்.

உக்ரைன் அகதிகளுக்கு அமெரிக்கா கூடுதலாக உதவ வேண்டும் என்று பல்வேறு உதவி அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து, உக்ரைன் அகதிகளை அமெரிக்கா வரவேற்கும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி வந்தது. தற்போது, 1 லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்பதாக அமெரிக்கா கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!