இன்று மாலை பாசறைக்கு வீரர்கள் திரும்பும் நிகழ்ச்சி

புதுடில்லி: பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி… இன்று மாலை நடைபெறும், வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில், 1000 டிரோன்களை வானில் பறக்கவிடுகிறது இந்திய நிறுவனம் ‘போட்லேப்’.
குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக இன்று மாலை நடைபெறும் ‘வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில்’ அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவி பெற்ற ,போட்லேப் டயனாமிக்ஸ் என்ற தொடக்கநிலை நிறுவனம் 1000 டிரோன்களை பறக்கவிட்டு, வானில் 3டி ஒளிக்காட்சியை நடத்தவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர ஆண்டைக் கொண்டாட, பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த ‘டிரோன் ஒளி கண்காட்சியை போட்லேப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.