முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை ஒட்டி அஞ்சலி

புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்., தலைவர் சோனியா , அவரது மகள் பிரியங்கா அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் மறைந்து 31வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்., சார்பில் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டில்லியில் காங்., தலைவர் சோனியா, மகள் பிரியங்கா காங்., மூத்த நிர்வாகிகள் டில்லியில் மரியாதை செலுத்தினர்.
ராஜிவ் மறைவு குறித்து அவரது மகன் ராகுல் கூறியிருப்பதாவது: ” எனது அப்பா நவீன இந்தியாவை உருவாக்கும் கனவு கொண்டவராக திகழ்ந்தார். அவர் இரக்கம், கனிவு உள்ளம் கொண்டவராக இருந்தார். அவருடன் வாழ்ந்த காலத்தை நினைந்து பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.