September 27, 2022

இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராக உள்ளது – நிபுணர்கள் கவலை

லண்டன் : இங்கிலாந்து மக்களால் ஓல்ட் ஃபாதர் தேம்ஸ் என்று பிரியமாக அழைக்கப்படும் தேம்ஸ் நதி, தென் மத்திய இங்கிலாந்தின் கண்கவர் காட்ஸ்வோல்ட் மலைகளிலுள்ள நான்கு ஊற்றுகளிலிருந்து பெருக்கெடுக்கிறது. இந்நிலையில், தேம்ஸ் நதி முன்னேப்பதும் இல்லாததை விட தற்போது கீழ்நோக்கி சென்று விட்டது. இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராக உள்ளதாக சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தின் சராசரி மழைப்பொழிவு 23.1 மில்லிமீட்டர், இந்த மாதத்தின் சராசரி மழை 35% மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சியே நிலவி வருகிறது.

நதியின் ஆதாரமாக அறியப்படும் இயற்கை நீரூற்று பெரும்பாலான கோடைகாலங்களில் வறண்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு வறண்ட ஆற்றுப்படுகையாக மாறி முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கணிசமாக இந்த ஆண்டு கீழ்நோக்கி சென்றடைகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்யவில்லை என்றால், உண்மையில், குளிர்காலம் வறண்ட காலமாகிவிடும் என பருவநிலை நிபுணர் ஹன்னா க்ளோக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!