October 5, 2022

ரஷியாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை அமெரிக்க மந்திரிகள் சந்தித்து ஆலோசனை

கீவ் : உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 2 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்துள்ளதால், கிழக்கு உக்ரைன் மீது கவனம் செலுத்தும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டு இருக்கிறது. போர் தொடங்கியது முதலே நவீன ஆயுதங்களையும், நிதியுதவியையும் அளித்து உக்ரைனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தாங்கி வருகிறது.

இந்த உதவியை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக தனது மந்திரி சபையில் முக்கிய அங்கம் வகித்து வரும் ராணுவ மந்திரி லாயிடு ஆஸ்டின், வெளியுறவு மந்திரி ஆன்றனி பிளிங்கன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கீவில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினர்.

அமெரிக்க மந்திரிகளுடனான சந்திப்பின்போது, உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிக அளவில் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி மேலும் கூறுகையில், உக்ரைனுக்கு உதவுதல் மற்றும் இந்த பிரச்சினையில் எடுத்துள்ள தெளிவான நிலைப்பாடு போன்றவற்றுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தனிப்பட்ட நிலையிலும், ஒட்டுமொத்த உக்ரைன் மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதைப்போல அமெரிக்க மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!