September 30, 2022

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்… உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மகாராஷ்டிரா: ராஜினாமா செய்கிறேன்… மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் உத்தவ் தாக்கரே. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.கள் என்ன விரும்பினார்களோ அதனை கொடுத்துள்ளேன். அடுத்து அமைய இருக்கும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளேன்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த சோனியா காந்தி, சரத் பவாருக்கு நன்றி. இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது_

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!