August 20, 2022

பிரான்ஸ் அதிபர் பதவிக்காக புதுச்சேரியில் வாக்குப்பதிவு

புதுச்சேரி: வாக்குபதிவு நிறைவு… புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இரு கட்டங்களாக நடைபெறும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 4 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்றில் குறைந்தது 50 சதவீதம் வாக்குகளைப் பெறும் நபர்கள் தேர்தலில் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

இந்நிலையில்,எந்த வேட்பாளருக்கும் 50 வாக்குகள் பெறவில்லை என்றால், முதல் 2 இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் பங்குபெறும் 2-ஆம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!