October 5, 2022

சிகரெட் மீதான எச்சரிக்கை செய்திகள்… கனடாவின் அதிரடி

புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் 2020 இல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தனி நபர் சிகரெட்டுகள் மீது சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக மாறவிருக்கும் கனடா தான், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் கிராஃபிக் புகைப்பட எச்சரிக்கைகளை உள்ளடக்குவதற்கான ஆணையை நிறைவேற்றிய முதல் நாடு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட புகையிலை பொருட்களில் சுகாதார எச்சரிக்கைகளைச் சேர்ப்பது, சிகரெட்டை அடிக்கடி அணுகும் இளைஞர்கள் உட்பட,இந்த அத்தியாவசிய செய்திகள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய உதவும்” என்று கருதுவதாக கனடா அரசு நம்புகிறது.

“சிகரெட் மீதான எச்சரிக்கை செய்திகள் வழக்கமானதாக மாறியிருக்கலாம் என்ற கவலையை நிவர்த்தி செய்ய வேண்டும், ஒரு அளவிற்கு, அந்த எச்சரிக்கைகள், தங்களது தாக்கத்தையும் இழந்திருக்கலாம் என்று கவலைப்படுகிறோம்” என்று கனடாவின் மனநலம் மற்றும் அடிமையாதல் (Mental Health and Addictions) அமைச்சர் கரோலின் பென்னட் கூறினார்.

2023 இன் இரண்டாம் பாதியில் இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள கனடா அரசு, “ஒவ்வொரு சிகரெட் புகைப்பதும் உடலில் ஒரு துளி விஷத்தை சேர்ப்பதற்கு சமம்” என்று குறிப்பிட்டார். இந்த முன்மொழிவை, கனடாவின் CEO Doug Roth இன் ஹார்ட் அண்ட் ஸ்ட்ரோக் அறக்கட்டளை வரவேற்றுள்ளது. “கனடா இப்போது உலகிலேயே சிகரெட்டுகளுக்கான வலுவான சுகாதார எச்சரிக்கை அமைப்பைக் கொண்டிருக்கும்” என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!