August 18, 2022

என்னது கொலை மிரட்டல் விடுத்தவர் இவரா?

இஸ்ரேல்: பிரதமா் நாஃப்டாலி பென்னட்டின் குடும்பத்துக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதில் தொடர்புடையதாக 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமா் பென்னட்டின் குடும்பத்துக்கு கடந்த மாதம் தபால் மூலமாக தோட்டாக்களை அனுப்பி, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, பிரதமருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தினா். மிரட்டல் குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தினா்.

இதில், மிரட்டலில் தொடா்புடையதாக மூதாட்டி ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமா் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தது தெற்கு இஸ்ரேலில் குடியிருக்கும் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அப்போதைய பிரதமா் இட்ஷாக் ராபின், கடந்த 1995-ஆம் ஆண்டு யூத தேசியவாதிகளால் படுகொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!