October 5, 2022

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை

சென்னை : தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக காலை அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமமடைந்துள்ளனர். இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!